ஆஹா என்ன அழகு! - தாராசுரத்தில் உள்ள பிரமாண்டமான ஐராவஸ்தேஸ்வரர் கோவில். கும்பகோணத்தில் அமைந்துள்ள இக்கோவில் வரலாறு, யாருமறியா உண்மைகள் மற்றும் அற்புதமான கலைகளின் பெட்டகம். இந்த கோவிலின் கட்டுமானம் கிபி 12 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒன்று. உலகப் புகழ்பெற்ற சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், வெண்கல வார்ப்பு -இவையனைத்தும் இந்த கோவில் சோழ வம்சத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், இந்திரனின் கம்பீரமான வெள்ளை யானையான ‘ஐராவத்’ பெயரால் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூரிலுள்ள பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கங்கைகொண்டசோழீஸ்வரம் கோயில் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘பெரிய சோழர் கோயில்களின்’ மூன்றில் ஒரு பகுதியான ஐராவஸ்தேஸ்வரர் கோயிலும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் ஒரு பகுதியாகும்.
கோவிலை அலங்கரிக்கும் கலை வேலைகள் மிகவும் விரிவானது, நுட்பமானது மற்றும் அழகானது ஆகும். இது கல்லில் செதுக்கிய கவிதை. திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் முக்கிய கல் வேலை ஒரு தேர் போன்றது. முழு கோவில் வளாகமும் பண்டைய இந்திய புராணங்களின் கதைகளை விவரிக்கும் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளது. இந்த கட்டிட அமைப்பு வெளிப்படுத்தும் வசீகரத்திற்கும் சிறப்பிற்கும் வர்ணிக்க வார்த்தைகள் போதுமானதாக இல்லை; இது கண்டிப்பாக பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும்.
கோவிலின் மற்றுமொரு மனதைக் கவரும் பகுதி இசைப் படிகள். பலிபீடத்திற்கு இட்டுச்செல்லும் இந்த 7 பாடும் படிகள் நுணுக்கமாக செதுக்கப்பட்டு ஏழு இசைக் குறிப்புகளைக் குறிக்கின்றன. எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலைப் படைப்பு என்று எண்ணும்போது வியப்பு தட்டுகிறது நம் மனம். இத்தகைய அனைத்து அம்சங்களும் ஐராவதேஸ்வரர் கோவில் வளாகத்தை உங்கள் தமிழக பயணத்தில் நிச்சயம் தவறாமல் பார்க்க வேண்டிய ஓர் இடமாக மாற்றுகிறது.
கும்பகோணம் பேருந்து நிலையம், சுமார் 5 கி.மீ.
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம், சுமார் 90 தொலைவில் உள்ளது
தாராசுரம் இரயில் நிலையம், சுமார் 1 கிமீ தொலைவில் உள்ளது.
நவம்பர் முதல் பிப்ரவரி வரை